மீண்டு வந்த மெத்யூஸின் சிறப்பான துடுப்பாட்டம்: 136 ஸ்டிரைக் ரேட்டில் 160 ஓட்டங்கள்

OruvanOruvan

Angelo Mathews

இலங்கை தேசிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு முன்னணி வீரர் அஞ்சலோ மெத்தியூஸின் மீள் வருகையானது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

2009 இல் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமான மெத்தியூஸ் சங்கா, மஹேல மற்றும் தில்ஷான் போன்ற பெயர்பூத்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஆடுகளத்தில் சக வீரராக துடுப்பெடுத்தாடி பல வெற்றிகளை இலங்கை அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் வெள்ளை - பந்து கிரிக்கெட்டில் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் மூடி சூடான மன்னனாகவும் அவர் திகழ்ந்தார்.

எனினும், அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்கள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கடினமான முடிவுகளினால் மெத்தியூஸின் கிரிக்கெட் வாழ்க்கையானது ஆடிப் போனது.

இறுதியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னைய தேர்வுக்குழு மெத்தியூஸுக்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுக்க முட்டுக்கட்டை இட்டது.

இந்த முடிவானது அனுவமிக்க வீரரை கணிசமாக விரக்கதியடையச் செய்தது.

மீண்டு வந்த மெத்தியூஸின் சிறப்பான துடுப்பாட்டம்

கடந்த சில வாரங்களாக மெத்தியூஸ் இலங்கை அணிக்கு திரும்பியதில் இருந்து, திங்கட்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி ஆட்டம் அவரது சிறப்பான துடுப்பாட்டத்தை கிரிக்கெட் உலகிற்கு பறைசாற்றியது.

அந்த ஆட்டத்தில் மெத்தியூஸ் 15 ஆவது ஓவரில் அணியின் 7 ஆவது இடத்தில் களமிறக்கப்பட்டார்.

துடுப்பெடுத்தாடுவதற்கு அவர் ஆரம்பத்தில் போராடினார், முதல் ஒன்பது பந்துகளில் நான்கு ஓட்டங்களை மாத்திரமே எடுத்தார்.

எனினும் விரைவில் எதிரணியின் பந்து வீச்சுக்களை சுதாகரித்துக் கொண்ட அவர், அதிரடியான ஆட்டத்தை பின்னர் வெளிப்படுத்தினார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளின் பின்னர் டி20 அரங்கிற்கு திரும்பிய மெத்தியூஸ் சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 51 பந்துகளுக்கு ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை எடுத்தார்.

முதல் டி20 போட்டியில் 38 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந் நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ‍டி20 போட்டியில் 6 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்த மெத்தியூஸ் இரண்டாவது போட்டியில் 22 பந்து வீச்சுக்கு 42 ஓட்டங்களை எடுத்தார்.

அவர் மீண்டும் வந்ததில் இருந்து 136 ஸ்டிரைக் ரேட்டில் 160 ஓட்டங்களை குவித்ததை தவிர, 8.95 என்ற எகானமி ரேட்டில் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் மெத்தியூஸ்.

மீண்டும் காயம்

பல ஆண்டுகளுக்கு முன்பு உடற்தகுதி காரணங்களுக்காக மெத்தியூஸ் பந்துவீசுவதற்கு வாய்ப்பு மழுங்கிப் போனது.

இந் நிலையில் அண்மைக்காலமான அவரது பந்து வீச்சு இலங்கை அணிக்கு ஒரு முக்கிய அங்கமாக மாற்றியுள்ளார்.

எனினும், அதிலும் பல சவால்களை மெத்தியூஸ் எதிர் நோக்க நேரிட்டது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆப்கானுடனான போட்டியில் விளையாடுவதற்கு முன், இறுக்கமான தொடை எலும்பு காரணமாக அவர் ஒரு உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியிருந்தது.

பந்து வீச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மெத்தியூஸ்,

சிம்பாப்வே தொடரில் இருந்து, அணியின் சமநிலைக்கு உதவும் வகையில் பந்துவீசுமாறு என்னிடம் கூறப்பட்டது, அதற்காக தான் எந்த நேரத்திலும் பந்துவீசத் தயாராக இருக்கிறேன் என்றார்.

எவ்வாறெனினும், தொடர் தோல்விகளினாலும், அவமானங்களினாலும் துவண்டு போயிருந்த இலங்கை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் மெத்தியூஸின் மீள் வருகை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்றால் அது மிகையாகாகது.

இலங்கை அணியில் திருப்பம்

2024 ஆம் ஆண்டில் தேசிய கிரிக்கெட் அணிக்கு குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்பட்டது, இலங்கை இரண்டு மாதங்களுக்குள் ஐந்து தொடர் வெற்றிகளைப் பதிவுசெய்தது மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்புத் தொடரில் இதுவரை ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

OruvanOruvan

Srilanka Cricket Team