டி20 அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்து பாபர் அசாம் சாதனை: அனைத்து விளையாட்டு செய்திகளும் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News Updates 21.02.2024

டி20 அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்து பாபர் அசாம் சாதனை

விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் விரைவாக 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையினை பாகிஸ்தான் நட்சத்திரம் பாபர் அசாம் படைத்துள்ளார்.

OruvanOruvan

Pakistan's Babar Azam beats Virat Kohli and Chris Gayle

209 ஓட்டங்களை குவித்த ஆப்கானிஸ்தான்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களை குவித்துள்ளது.

OruvanOruvan

209 on the board for Afghanistan!

மூன்றாவது டி20 ஆட்டம்; நாணய சுழற்சியில் ஆப்கான் வெற்றி

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த ஆட்டமானது இன்றிரவு 7.00 மணிக்கு தம்புளையில் ஆரம்பமாகும்.

OruvanOruvan

Afghanistan won the toss again and elected bat first

அரினா சபலெங்கா அதிர்ச்சி தோல்வி

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா, குரோஷியாவின் டோனா வெகிக்குடனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

OruvanOruvan

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

OruvanOruvan

India pacer released from squad for the fourth England Test

முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

OruvanOruvan

Australia won by 6 wkts

ஆப்கான் நட்சத்திரத்துக்கு 12 மாத தடை

ஷார்ஜா வாரியர்ஸுடனான ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமட், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ILT20 தொடரலிருந்து 12 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.

OruvanOruvan

Ban to Noor Ahmad

இலங்கையுடன் மீண்டும் மோதும் ஆப்கானிஸ்தான்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 யின் 3ஆவது போட்டி இன்று தம்புள்ளை மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆண் குழந்தைக்கு மீண்டும் அப்பாவான விராத் - சச்சின் டென்டுல்கர் சிறப்பு வாழ்த்து

இந்திய கிரிகெட் அணியின் வீரரான விராத் கோலி மற்றும் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். அந்தவகையில் பிரபல கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் மற்றும் பிலபலங்கள் அனைவரும் அவர்களை வாழ்த்தி வருவகின்றனர். அவர்களின் பையனுக்கு Akaay என பெயரிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட்

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பண்ட் செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

OruvanOruvan