பங்ளாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவராக ஷாண்டோ நியமனம்: அனைத்து விளையாட்டு செய்திகளும் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News updates 13.02.2024

பங்ளாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவராக ஷாண்டோ நியமனம்

பங்ளாதேஷ் கிரிகெட் அணியின் தலைவராக நஜ்முல் உசேன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, ரி20 போட்டி ஆகியவற்றுக்கு அவர் அணித் தலைவராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

அவுஸ்திரேலியாவை 37 ஓட்டங்களினால் வீழ்த்திய மே.இ.தீவுகள்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. எனினும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரினை அவுஸ்திரேலியா 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

OruvanOruvan

West Indies won by 37 runs

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் ஆடவர் வீரராக ஷமர் ஜோசப் தேர்வு

2024 ஜனவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் ஆடவர் வீரராக இளம் மேற்கிந்தியத்தீவுகள் வேகப் பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் தேர்வு - இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் மற்றும் அவுஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடனான பலத்த போட்டிக்கு மத்தியில் அவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

OruvanOruvan

Shamar Joseph delivered a masterclass against the Aussies in the second Test

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்

நஜ்முல் ஹொசைன் சாண்டோ பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவ போட்டிகளுக்குமான தலைவராக ஒரு வருடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளர். ஷாகிப் அல் ஹசனின் இடது கண்ணின் விழித்திரையில் ஏற்பட்ட பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில் இந்த நியமனம் வந்துள்ளது - பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்

OruvanOruvan

Najmul Hossain Shanto has been appointed Bangladesh men's captain

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி இலங்கையில்

சுமார் எட்டு நாடுகளைச் சேர்ந்த பல புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப் போட்டிகள் நடைபெறும்.

OruvanOruvan

Legends Cricket tournament to be played in Sri Lanka

ஆப்கானுடனான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கேள்விக் குறியாகியுள்ள துஷ்மந்த சமீரவுக்கு ஈடாக இந்த அணியில் பினுர பெர்னாண்டோ இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் - ஸ்ரீலங்கா கிரிக்கெட்

OruvanOruvan

The Sri Lankan T20I squad for the Afghanistan series

மீண்டும் திரும்பிய ஆடம் பீட்டிக்கு உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம்

மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான நீச்சல் வீரர் ஆடம் பீட்டி (Adam Peaty), தோஹாவில் நடந்த உலக நீர்வாழ் சம்பியன்ஷிப் (World Aquatic Championships) 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 2022 ஆம் ஆண்டுகளிலிருந்து ஓய்வில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Adam Peaty back winning medals

மகப்பேறின் பின் மீண்டும் திரும்பிய ஒசாக முதல் சுற்றில் கார்சியாவை வீழ்த்தினார்

15 மாத மகப்பேறு விடுப்புக்கு பின்னர் டென்னிஸ் அரங்கிற்கு மீண்டும் திரும்பிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான நவோமி ஒசாகா, கட்டார் ஓபனின் முதல் சுற்றில் உலகின் 21 ஆம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியாவை 7-5 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

OruvanOruvan

Naomi Osaka outclasses Caroline Garcia in Qatar Open

கட்டார் ஓபன்; முதல் சுற்றில் எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வி

தோஹாவில் நடைபெற்று வரும் கட்டார் ஓபன் முதல் சுற்றில் உலகின் 30 ஆம் நிலை வீராங்கனையான அன்ஹெலினா கலினினாவிடம் (Anhelina Kalinina) பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு (Emma Raducanu) 6-0, 7-6 (6) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

OruvanOruvan

Qatar Open: Emma Raducanu knocked out in first round by Anhelina Kalinina

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கால்பந்து போட்டியின்போது ஆடுகளத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் களத்தின் நடுவிலேயே உயிரிழந்த சோக சம்பவம், இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.

OruvanOruvan