ஆப்கானிஸ்தான் அணியை இலகுவாக வீழ்த்தியது இலங்கை: அனைத்து விளையாட்டு செய்திகளும் சுருக்கமாக ஒரே பார்வையில்...
இலங்கை அணி 155 ஓட்டங்களால் அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கண்டி - பல்லேகல மைதானத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்களால் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0 என்ற ரீதியில் முன்னிலைப் பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்
19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 87 ஓட்டங்களை பெற்றுள்ளது.
"SA20" டி20 லீக்கில் சாம்பியன் பட்டம் வென்று கிண்ணத்தை சுவீகரித்த சன்ரைசர்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் ஆறு அணிகள் பங்கேற்ற "SA20" 20 ஒவர் தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 10 ஆம் திகதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
பாரீஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுகின்றார் செல்லி ஏன் ப்ரசர்
உலகில் இதுவரை வெற்றிகரமான ஓட்டப்பந்தய வீராங்கனையாக கருதப்படும் Shelly-Ann-Fraser-Pryce, எதிர்வரும் பாரீஸ் ஒலிம்பிக்குடன் தனது ஓட்டப்பந்தய வாழ்க்கையை நிறுத்த முடிவு செய்துள்ளார்.