2024 ஐபிஎல்: ரிஷாப்பின் மறு பிரவேசம் குறித்து ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

OruvanOruvan

Rishabh Pant and Ricky Ponting

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிக்கு ரிஷாப் பந்த் முழுமையாக குணமடைந்து திரும்புவார் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய நட்சத்திரம் ரிஷாப் பந்த் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த பயங்கர கார் விபத்தில் படுகாயம் அடைந்தார்.

இதனால் அவர், சர்வதேச மற்றும் உள்நட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை இழந்தார்.

குறிப்பாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி மற்றும் ஐசிசி ஆடவர் ஒருநாள் உட்பட முக்கிய சர்வதேச போட்டிகளை தவறவிட்டார்.

இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷாப் பந்த் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது.

அதற்கு அமைவாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷாப் பந்த் தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் நிச்சயம் அவர் இந்தாண்டு ஐபில் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

ரிஷாப் நிச்சயம் விளையாடுவார் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

இந் நிலையில் ரிஷாப் பந்தின் 2024 ஐபிஎல் பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங்,

ரிஷாப் பந்த் 2024 ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.

ரிஷாப் பந்த் தற்சமயம் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளர். அவர் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பது தெரியவில்லை.

சமூக வலைதளங்களில் வரும் விடயங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் அவர் நன்றாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

ஆனால் ஐஎபில் தொடரில் எங்களது முதல் போட்டிக்கு இன்னும் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ளது.

அதனால் அவருக்கு அணியின் விக்கெட் காப்பாளருக்கான இடம் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.

இதுகுறித்து நான் அவரிடம் கேட்டால், ரிஷாத் பந்த் கண்டிப்பாக ’நான் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது மட்டுமின்றி, என்னால் விக்கெட் காப்பு செய்ய முடியும்’ என்று கூறுவார்.

அவர் திறமையான வீரர். அவர்தான் எங்கள் அணியின் தலைவரும் கூட.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நாங்கள் அவரை மிகவும் இழந்தோம். ஏனெனில் கடந்த 12-13 மாதங்கள் அவர் குறித்த விடயங்களை நாம் அறிவோம்.

ஏனெனில் அவர் அந்த விபத்தில் உயிர் பிழைத்ததே மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று.

இதனால் அவர் இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியவில்லை என்றாலும், எங்களுக்காக 10 போட்டிகளில் விளையாடினால் கூட அது எங்களுக்கு போனஸ் தான் என்று கூறியுள்ளார்.

2024 ஐபிஎல் போட்டிகளில் ரிஷாப் பந்த்தின் வெற்றிகரமான தோற்றம் 2024 டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்கு மீண்டும் வருவதற்கு ரிஷாத் பந்த்திற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரிஷாப் பந்த் மொத்தமாக 4123 ஓட்டங்களையும், 19 க்கும் மேற்பட்ட அரை சதங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.