பிரபாத்தின் சிறந்த பந்து வீச்சு: அனைத்து நாடுகளையும் தோற்கடித்து இலங்கை அணி படைத்த சாதனை

OruvanOruvan

Sri Lanka DOMINATES Afghanistan in a resounding 10-wicket victory!

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க ஐந்து நாள் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் மூன்றாம் நாள் முடிவில் இரண்டாம் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 199 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டியின் நான்காம் நாளான திங்கட்கிழமை மதிய உணவு வரை இரண்டு மணி நேரத்தில் மேலதிகமாக 6 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களை எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி.

பின்னர் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்யவின் சிறப்பான பந்து வீச்சினால் ஆப்கானிஸ்தான் அணி, நான்காம் நாள் ஆட்டத்தில் மொத்தமாக 97 ஓட்டங்களுக்கு ஏனைய ஒன்பது விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் வெற்றி இலக்காக 56 ஓட்டங்கள் மாத்திரம் நிர்ணயிக்கப்பட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் விளையாடும் உலகின் அனைத்து நாடுகளையும் தோற்கடித்த முதல் அணி என்ற பெருமையை இலங்கை பெற்றது.

பிரபாத் ஜயசூரியவின் அற்புதமான பந்து வீச்சு

32 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக பந்துவீசி 101 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சிலும் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர், ஆட்டத்தின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

பிரபாத் ஜயசூர்ய மாத்தளை கிறிஸ்துதேவா கல்லூரியில் இருந்து கிரிக்கெட் விளையாட்டிற்குள் நுழைந்தார்.

அவர் 10 டெஸ்ட் போட்டிகளில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிவேகமாக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆட்ட நாயகன் பிரபாத் ஜயசூர்ய ஒரு இன்னிங்சில் ஐந்து டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியது இது ஏழாவது முறையாகும்.

OruvanOruvan

Prabath Jayasuriya! Bags a five-wicket

5 நாள் ஆட்டம் நான்கு நாட்களிலேயே நிறைவு

ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 98 ஓட்டங்களுக்கு கடைசி 8 விக்கெட்டுகளை இழந்தது, இரண்டாவது இன்னிங்ஸில் 59 ஓட்டங்களுக்கு கடைசி 8 விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் ஐந்து நாள் ஆட்டம் கொண்ட டெஸ்ட் போட்டி மூன்றாம் நாளான நேற்று பிற்பகல் 2.05 மணிக்கு முடிவடைந்தது.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கு 56 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்னே (32), நிஷான் மதுஷ்கா (22) ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 7.3 ஓவர்களில் (33 நிமிடம்) ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றயை பதிவு செய்தனர்.

போட்டி பற்றிய சுருக்கம்

ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸ்:

198-10 (62.4 Ov)

  • ரஹ்மத் ஷா - 91

  • நூர் அலி சத்ரன் - 31

இலங்கை பந்து வீச்சு

  • விஷ்வ பெர்னாண்டோ - 4 விக்கெட்

  • அஷித பெர்னாண்டோ - 3 விக்கெட்

  • பிரபாத் ஜயசூர்ய - 3 விக்கெட்

இலங்கை முதல் இன்னிங்ஸ்:

439-10 (109.2 Ov)

  • அஞ்சலோ மெத்தியூஸ் - 141

  • தினேஸ் சந்திமால் - 107

  • திமுத் கருணாரத்ன - 77

ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு

  • நவீத் சத்ரன் - 4 விக்கெட்

  • கைஸ் அகமட் - 2 விக்கெட்

  • நிஜாத் மசூத் - 2 விக்கெட்

ஆப்கானிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸ்

296-10 (112.3 Ov)

  • இப்ராஹிம் சத்ரான் - 114

  • ரஹமட் ஷா - 54

இலங்கை பந்து வீச்சு

  • பிரபாத் ஜயசூர்ய - 5 விக்கெட்

  • அஷித பெர்னாண்டோ - 3 விக்கெட்

  • கசூன் ராஜித - 2 விக்கெட்

இலங்கை இரண்டாவது இன்னிங்ஸ்

56-0 (7.2 Ov)

  • திமுத் கருணாரத்ன - 32

  • நிஷான் மதுஷன்க - 22

OruvanOruvan

Sri Lanka won by 10 wkts