இலங்கை - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: திறமையை மீண்டும் நிலைநிறுத்த களத்தில் ஆக்ரோஷம் தேவை - தனஞ்சய

OruvanOruvan

SL vs AFG, one-off Test

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பு. எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணியானது களத்தடுப்பினை முதலில் தேர்வு செய்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் ஆப்கானிஸ்தான் மதிய நேர உணவு இடைவ‍ேளை வரை 25 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மத் ஷா 48 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் இலங்கையுடனான தனது முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் தொடரை ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் ஆட்டத்துடன் இன்று தொடங்கியுள்ளது.

உலகக் கிண்ண பயணத்தை தொடர்ந்து அண்மைய டி-20 தொடரில் இந்தியாவுக்கு கடும் சாவலை கொடுத்த ஆப்கானிஸ்தான், இலங்கையுடனான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தங்கள் ஆதிக்கத்தை வெளிக்காட்டுவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஐசிசி முழு உறுப்பினர் அந்தஸ்தை பெற்றதில் இருந்து, ஆப்கானிஸ்தான் ஏழு போட்டிகளில் மட்டுமே விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆட்டம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்காது.

எனினும் போட்டியாளர்கள் தங்கள் திறமையை மிக நீண்ட வடிவத்திலும் வெளிப்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இலங்கை

இந்த ஆட்டத்தில் இலங்கை ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ளது - இந்த போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது முதல் டெஸ்டில் தலைமை வகிக்கிறார்.

தனஞ்சய டிசில்வா இலங்கை டெஸ்ட் அணியில் ஒரு ஆற்றல் மிக்க முன்னிலையில் உள்ளார், அண்மைக்காலமாக அணியில் ஒரு தவிர்க்க முடியாத கீழ்-மிடில்-ஆர்டர் துடுப்பாட்ட வீரராக வளர்ந்துள்ளார்.

அதேநேரம், பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் அவர் தன்னாலான அனைத்து பங்களிப்பினையும் அணிக்கு வழங்கி வருகிறார்.

இந்த ஆட்டம் உள்நாட்டில் நடைபெறுவதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு சொந்த மண்ணில் இலங்கையை எதிர்கொள்வது கடினமான விடயமாக அமையலாம்.

இலங்கை தற்போது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் அட்டவணையில் இறுதி இடத்தில் உள்ளது, மேலும் இந்த போட்டியின் முடிவு கணக்கிடப்படாவிட்டாலும், வீரர்கள் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அணிக்கு நம்பிக்கை இருக்கும்.

தனஞ்சய டிசில்வா

போட்டிக்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தனஞ்சய டிசில்வா,

எனது நாட்டின் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம் எனது கிரிக்கெட் வாழ்க்கை அதன் உச்சத்தை எட்டியுள்ளது என்பதை அறிவேன்.

இலங்கை தனது டெஸ்ட் திறமையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு களத்தில் அதிக ஆக்ரோஷம் தேவை.

ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணிக்கு எதிராக எங்களுக்கு ஒரு தனித்துவமான நன்மை இருந்தாலும், நாங்கள் ஆப்கானிஸ்தானை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு நாள் போட்டியில் அவர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம் - என்றார்.

2016 ஜூலை 26 அன்று அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கண்டி, பல்லேகலயில் அறிமுகமானதில், 51 டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள், அதிகபட்சமாக 173 ஓடங்கள், 39.77 சராசரியுடன் மொத்தமாக 3,3o1 ஓட்டங்களை எடுத்துள்ளார் தனஞ்சய டிசில்வா.

பந்து வீச்சில் 57.29 சராசரியுடன் 34 விக்கெட்டுகளை டெஸ்ட் அரங்கில் வீழ்த்தியுள்ளார்.

OruvanOruvan

Dhananjaya de Silva

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி

இலங்கைக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி,

எதிரணியான இலங்கையை தோற்கடிக்க தனது அணி உண்மையில் ஆவலுடன் உள்ளது.

நாங்கள் இலங்கையை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏழு ஆண்டுகளில், நாங்கள் ஏழு டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாடிள்ளோம். இது முன்னேற்றத்தின் அடிப்படையில் போதுமானதாக இல்லை. ஆனால் நாங்கள் ஒரு தேசமாகவும் ஒரு குழுவாகவும் வலுவாக இருக்கிறோம்.

நாங்கள் தைரியமாக இருக்கிறோம், நாங்கள் போராடுவதற்கு இங்கே வந்துள்ளோம். முடிவு நமக்கு சாதகமாக வரும் என நம்புகிறேன் - என்றார்.

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி 6 டெஸ்ட் போட்டிகளில் 53.57 சராசரியுடன் ஒரு சதம், ஒரு அரை சதம், அதிகப்படியாக 200 ஓட்டங்கள் என்பவற்றுடன் மொத்தமாக 375 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

OruvanOruvan

Hashmatullah Shahidi