ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக மீண்டும் ஜெய் ஷா: ஷம்மி சில்வாவால் பெயர் முன்மொழிவு

OruvanOruvan

Jay Shah

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3 ஆவது முறையாகவும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெய் ஷாவின் பதவி நீடிப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) தலைவரான ஷம்மி சில்வாவால் முன்மொழியப்பட்டது.

மேலும் இந்த நியமனம் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஆதரிக்கப்பட்டது என்று ஏசிசி புதன்கிழமை (31) தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் பாலியில் இன்று ஆரம்பமாகியுள்ள ஏசிசியின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான நஸ்முல் ஹாசனிடமிருந்து 2021 ஜனவரியில் ஜெய் ஷா, ஏசிசியின் தலைவராக பெறுப்பேற்றமை குறிப்பிடத்கத்கது.