ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெய் ஷா: நவம்பரில் தேர்தல்

OruvanOruvan

Jay Shah

சர்வதேச கிரிக்கெட் நிர்வாக (ஐசிசி) தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா போட்டியிடுகிறார்.

கிரிக்பஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி,

இந்த ஆண்டு நவம்பரில் திட்டமிடப்பட்ட ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் நிர்வாக (ஏசிசி) தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜெய் ஷா போட்டியிட விரும்பினால், அவர் ஏசிசி தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

ஜெய் ஷா ஏசிசியின் தலைவராக தனது இரண்டாவது இரண்டு வருட பதவிக்காலத்தில் தற்சமயம் உள்ளார்.

கிரெக் பார்க்லே ஐசிசியின் தற்போதைய தலைவராக உள்ளார்.

இந்த ஆண்டு முடிவடையும் இரண்டாவது இரண்டு வருட காலத்திற்கு ஐசிசியின் தலைவராக பார்க்லே 2022 நவம்பரில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.