இலங்கை - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி: ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

OruvanOruvan

Srilanka Cricket team

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் ஆரம்பமாகிறது.

போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் 4 மற்றும் 9 ஆகிய வாயில்கள் மூலமாக மைதானத்திற்குள் இலவசமாக நுழையலாம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது போட்டிக்காக இன்று நாட்டை வந்தடையும் என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கூறியுள்ளது.