இங்கிலாந்துடனான 2 ஆவது டெஸ்ட் போட்டி: ஜடேஜா, ராகுல் நீக்கம்

OruvanOruvan

Jadeja, Rahul ruled out of Vizag Test

விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் ஜடேஜாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது.

அதேநேரத்தில் ராகுல் தனது வலது தொடையின் முன் பகுதியில் வலி இருப்பதாக முறைப்பாடு செய்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருவரும் வெளியேறிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சர்பராஸ் கான், சவுரப் குமார், வொஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரையும் தேர்வுக் குழு அணியில் சேர்த்துள்ளது.