அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ்: சம்பியனாகினார் அரினா சபலெங்கா
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலெங்கா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மெல்போர்னில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா ஜெங் கின்வெனை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் அவர் 12 ஆம் நிலை வீராங்கனையான ஜெங் கின்வெனை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இது பெலாரஷ்ய வீராங்கனையான அரினா சபலெங்காவின் (வயது 25) இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.