ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது ரச்சின் ரவீந்திராவுக்கு: 2023 உலகக் கிண்ணத்தில் 578 ஓட்டங்கள்

OruvanOruvan

New Zealand

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரர் விருதினை நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அதீத திறனை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு ஐசிசி இந்த விருதினை வழங்கி பாராட்டியுள்ளது.

குறித்த விருதுக்கான பந்தயத்தில் தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க மற்றும் இந்திய துடுப்பாட்ட நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை தோற்கடித்து அவர் விருதினை வென்றுள்ளார்.

2023 உலகக் கிண்ண போட்டியில் ரச்சின் ரவீந்திரா 578 ஓட்டங்களை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.