டோஹா ஏடிபி 250: மீண்டும் களமிறங்கும் நடால்
எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி டோஹாவில் ஆரம்பமாகும் ஏடிபி 250 போட்டிகளுடன் ரஃபேல் நடால் டென்னிஸ் அரங்கில் தனது மறுபிரவேசத்தை ஆரம்பிக்கின்றார்.
2013 ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த கட்டார் ஓபனை வென்றார் ஸ்பெய்ன் வீரர்.
இந் நிலையில் இந்த மாத தொடக்கத்தில் நடாலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 2024 அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடும் வாயப்பு இல்லாது போனது.
எனினும் பெப்ரவரி 19 ஆம் திகதி தொடங்கும் தோஹாவில் நடைபெறும் ஏடிபி 250 நிகழ்வில் பங்கெடுப்பதை நடால் உறுதிபடுத்தியுள்ளார்.
நடலாம் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளமையும் குறிப்பிடத்க்கது.