ஐசிசி டெஸ்ட் அணி: தனக்கான இடத்தினை உறுதி செய்த திமுத்
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.
அந்த அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
மேலும், இந்த அணியில் இலங்கை நட்சத்திரம் திமுத் கருணாரத்னவும் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன, கடந்த ஆண்டில் 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
எனினும் 60.8 சராசரியுடன் 608 ஓட்டங்களை குவித்ததன் மூலம் அவர் 2023 ஐசிசி டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தினை உறுதி செய்துள்ளார்.