அவுஸ்திரேலிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
முன்னணி நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மெல்போர்னில் செவ்வாய் (23) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அவர், 12 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7-6 (7-3) 4-6 6-2 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் செர்பிய வீரர் 11 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்திற்கான தனது முயற்சியை தொடர்ந்தார்.
36 வயதான ஜோகோவிச், மெல்போர்ன் பார்க்கில் கடந்த 33 ஒற்றையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு செல்ல அவர் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலிய நான்காம் நிலை வீரர் ஜானிக் சின்னர் அல்லது ரஷ்யாவின் ஐந்தாம் நிலை வீரரான ஆண்ட்ரே ரூப்லெவை எதிர்கொள்வார்.