ஐசிசியின் ஆடவர் டி20 அணி: தலைவராக சூர்யகுமார் யாதவ் நியமனம்

OruvanOruvan

Suryakumar Yadav

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணியை திங்களன்று (22) அறிவித்தது.

அந்த அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும் ரவி பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் குறித்த அணியில் உள்ளனர்.

சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு டி20 அரங்கில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.

2023 இல் அவர் 18 டி20 போட்டிகளில் 733 ஓட்டங்களை குவித்து முன்னிலையில் உள்ளார். இரு சதங்களையும் விளாசியுள்ளார்.

அதேநேரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அண்மைய டி20 தொடரின் போதும் சூர்யகுமாமர் யாதவ் 56 பந்துகளில் சதம் பெற்றார்.

இந்த தொடரை இந்தியா 0-1 என்ற கணக்கில் கைப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan