புதிய திருமண அறிவிப்பின் பின்: டி20 அரங்கில் வரலாற்றை உருவாக்கினார் மலிக்

OruvanOruvan

Shoaib Malik

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் சோயிப் மலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடனான விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு மத்தியில் நடிகை சனா ஜாவேத் உடனான தனது திருமணத்தை அறிவித்ததில் இருந்து சமூக தளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

களத்திற்கு வெளியே உள்ள செய்திகள் இணையத்தில் நிறைய விவாதங்களுக்கு வழிவகுத்த நிலையில், மலிக் கிரிக்கெட் களத்தில் ஒரு பெரிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

மூத்த கிரிக்கெட் வீரர் டி-20 கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்களை எடுத்த முதல் ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக இரண்டாவது வீரர் ஆனார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) போட்டியில் ரங்பூர் ரைடர்ஸு மற்றும் ஃபார்ச்சூன் பாரிஷலுக்கு இடையேயான போட்டியின் போது அவர் இந்த சாதனையை புரிந்தார்.

மற்றும் ஒட்டுமொத்த டி20 அரங்கில் கிறிஸ் கெயிலுடன் 13,000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராக இணைந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார், ஆனால் அவர் டி20 ஆட்டங்கள் மற்றும் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

மேலும் 2024 டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுடனான பிரிவினை பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாகிஸ்தான் பிரபல நடிகை சனா ஜாவேத் என்பவரை கராச்சியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக மலிக் சனிக்கிழமை அறிவித்தார்.

கிரிக்கெட் வீரர் தனது புதிய மனைவியுடன் சமூக ஊடக தளமான X இல் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டார்.

41 வயதான ஷோயப் மற்றும் சானியா இடையேயான கருத்து வேறுபாடுகள் பிரிவினைக்கு வழிவகுத்தது பற்றி 2022 முதல் வலுவான வதந்திகள் உள்ளன.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் அரிதாகவே ஒன்றாகக் காணப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு மலிக் இந்திய நட்சத்திரத்தை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தினார்.

இவர்களது ஐந்து வயது மகனான இசான், சானியாவுடன் வசித்து வருகிறார்.

மலிக் மற்றும் சானியா ஏப்ரல் 2010 இல் இந்திய நட்சத்திரத்தின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.