வீண் போன அசலங்கவின் அதிரடி ஆட்டம்: 2 ஆவது போட்டியில் இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே

OruvanOruvan

Sri Lanka vs Zimbabwe, 2nd T20I

கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு (16) நடந்த இரண்டாவது டி20 போட்டியில் சிம்பாப்வே அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றதுடன், சரித் அசலங்கவின் 39 பந்துகளில் அதிரடியான 69 ஓட்டங்களும் வீண் போனது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 27 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

எனினும் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சரித் அசலங்க ஆகியோரின் துடுப்பாட்டம் அணிக்கு கை கொடுக்க இறுதியாக 20 ஓவர்கள் நிறைவுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை குவித்தது இலங்கை.

அணி சார்பில் அதிகபடியாக சரித் அசலங்க 69 (39) ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 66 (51) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்த வீச்சில் சிம்பாப்வே சார்பில் முசரபானி மற்றும் லூக் ஜாங்வே ஆகியோர் அதிகபடியாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 19.5 ஆவது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.

சிம்பாப்வே சார்பில் அதிகடியாக கிரேக் எர்வின் 54 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றதுடன், போட்டியின் ஆட்டநாயகனாக லூக் ஜாங்வே தெரிவானார்.

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் முடிந்ததுடன், இறு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறும்.

OruvanOruvan