இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷமிக்கு காயம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகல்
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளும் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன.
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா இடையே டி20 தொடர் அண்மையில் நடந்து முடிந்தது.
இந்நிலையில், டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில் அவர் நீக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.