கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய முன்னணி கழகத்தில் இடம்பிடித்த இலங்கை தமிழ் இளைஞர்: பிரித்தானியாவில் கழகம் ஒன்றில் முழு நேர கால்பந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர் என்கிற பெருமையை விமல் யோகநாதன் பெற்றுள்ளார்.

OruvanOruvan

Vimal Yoganathan Photo credit - Sky Sports

பிரித்தானியாவின் முன்னணி கால்பந்து கழகமான Barnsleyஇல் இணைந்து விளையாடும் வாய்ப்பை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

17 வயதான விமல் யோகநாதன் இங்கிலாந்தில் விளையாடும் முதல் தமிழ் தொழில்முறை கால்பந்து வீரராக உருவாகியுள்ளார்.

இந்நிலையில், தெற்காசியாவில் தெற்காசிய வீரர்களை தொழில்முறை கால்பந்தில் உருவாக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக விமல் யோகநாதன் தெரிவித்துள்ளார்.

Sky Sportsக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கழகம் ஒன்றில் முழு நேர கால்பந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழர் என்கிற பெருமையை விமல் யோகநாதன் பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் செஸ்டரில் பிறந்த கால்பந்து வீரர் விமல் யோகநாதனின் அசாதாரண திறமையால் லிவர்பூல் கால்பந்து கழகம் அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது தங்கள் இளைஞர் அகாடமியில் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தது.

இந்த காலப்பகுதியில் அவர் தனது திறமையை மென்மேலும் வளர்த்துக்கொண்டார். லிவர்பூல் கழகத்தில் இருந்த போது அவரது விளையாட்டு திறன் மற்றும் நுட்பங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அண்மையில் பிரித்தானியாவின் முன்னணி கால்பந்து கழகங்களில் ஒன்றான Barnsley உடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அவர், அந்த கழகத்தின் 18 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியிருந்தார்.

தொழில்முறை மேம்பாட்டு கால்பந்து தொடரில் Barnsley வெற்றிபெறுவதற்கு விமல் யோகநாதன் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்தில் விளையாடும் தமிழ் பாரம்பரியத்தின் முதல் தொழில்முறை கால்பந்து வீரராக 17 வயதான விமல் யோகநாதன் உருவாகியுள்ளார்.