அவுஸ்ரேலியாவுக்கு வலுவான ஓட்ட இலக்கை நிர்ணயித்த தென்னாபிரிக்கா; தோல்வியிலிருந்து மீளுமா ஆஸி?: 50 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
உலகக்கிண்ண தொடரில் முக்கிய போட்டியொன்று இன்று லக்னோவில் நடைபெற்று வருகிறது.
அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் இந்தப் போட்டியில் நிதானமான துடுப்பாட்டத்தால் தென்னாபிரிக்க அணி 311 என்ற வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அதிரடிக்காட்டிய குயின்டேன் டி கொக் தனது 19வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இவர் 109 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க வலுவான பங்களிப்பை வழங்கினார்.
மறுபுறம் முதல் விக்கெட்டுக்காக துடுப்பெடுத்தாடிய தம்பா பவுமா 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எய்டன் மார்க்ரம் 44 பந்துகளில் 56 ரன்களை குவித்தார்.
50 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், கிளென் மக்ஸ்வெல் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
312 என்ற வெற்றி இழக்கை நோக்கி அவுஸ்ரேலிய அணி இன்னும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாடி உள்ளது.
அவுஸ்ரேலியா அணி இந்தியாவுடனான தனது முதல் போட்டியில் தோல்வியுற்றதுடன், தென்னாபிரிக்க அணி தமது முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.