ஏறி வந்து விராட் கோலி அடித்த சிக்சர்! ரசிகர்கள் சத்தத்தில் அதிர்ந்த மைதானம்: காணொளி: அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி 56 ஓட்டங்கள் எடுத்தார்.

OruvanOruvan

Virat Kohli Photo Credit: BCCI

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி 56 ஓட்டங்கள் எடுத்தார்.

இதில் 5 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

கோலி அடித்த அந்த ஒரு சிக்சர் மிரட்டலாக இருந்தது.

மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை கிரீஸில் இருந்து ஏறி வந்து விளாசி வானவேடிக்கை காட்டினார்.

இது தொடர்பான காணொளி வைரலாகியுள்ளது.