இன்று பிறந்தநாள் கொண்டாடும் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா - சாதனைகள் ஒரு பார்வை: 40வது பிறந்தநாளை கொண்டாடும் மலிங்காவுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து.

OruvanOruvan

Lasith Malinga Photo Credit: AP

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் லசித் மலிங்கா.

இலங்கை அணிக்காக 2004 முதல் 2020 வரை டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளில் விளையாடி அணியின் அடையாளமாக இருப்பவர்.

தொடக்கத்தில் இவரின் பந்துவீசும் பாணி விநோதமாக பார்க்கப்பட்டது. இது பற்றி சில துடுப்பாட்ட வீரர்கள் ஆட்சோபனையும் தெரிவித்தனர்.

ஆனால் ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டு இவரது பந்துவீச்சு பாணி உள்ளது என உறுதி செய்யப்பட்டது.

கிரிக்கெட் உலகில் மலிங்கா செய்த சாதனைகள் ஏராளம்..!

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த வீரர், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இரண்டு முறை எடுத்த வீரர், ஒரு நாள் போட்டிகளில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் மலிங்கா.

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரான மலிங்கா ஐபிஎல் தொடரில் 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அதேபோல் இலங்கை அணி 2014ஆம் ஆண்டில் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த அணி 2002 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பின்னர் வென்ற ஐசிசி தொடராக அமைந்த டி20 உலகக் கோப்பை அணிக்கு தலைவராக பொறுப்பு வகித்தவர் மலிங்கா தான்.

இப்படியான பல்வேறு சாதனைகளை கிரிக்கெட்டில் படைத்துள்ள லசித் மலிங்கா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையடுத்து சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி மற்றொரு முகமும் மலிங்காவுக்கு உள்ளது, இசை பிரியரான அவர் ‘பழமுவரட’ என்ற தலைப்பில் தனிப்பாடல் ஒன்றை எழுதி நடித்துள்ளார்.

சிங்கள மொழியில் உள்ள இந்த பாடலை தனது அன்பு மனைவிக்கு சமர்ப்பித்துள்ளார்.