ப்ரீமியர் லீக் தொடர் : லூடன் டவுனை வீழ்த்தியது செல்சி: இரண்டாவது பாதியிலும் லூடன் டவுன் (Luton Town) அணியால் கோல்கள் எதுவும் பதிவு செய்ய முடியாமல் போனது.
ப்ரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சுற்றின் முதலாவது போட்டியில் லூடன் டவுன் (Luton Town) அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சி (Chelsea) அணி வெற்றிபெற்றது.
குறித்த போட்டியானது இன்றைய தினம் செல்சி அணியின் சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ்ஜில் (Stamford Bridge) நடைபெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியின் 17வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் (Raheem Sterling) செல்சி அணிக்கான முதலாவது கோலை பதிவு செய்தார்.
முதலாவது பாதியை லூடன் டவுன் (Luton Town) அணி சமன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லூடன் டவுன் அணி வீரர்களால் கோல்கள் எதுவும் பதிவு செய்ய முடியாமல் போனது.
இரண்டாவது பாதியில் மீண்டும் செல்சி அணியின் வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் (Raheem Sterling) அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது பாதியின் 75வது நிமிடத்தில் செல்சி அணியின் வீரர் நிக்கோலஸ் ஜாக்சன் (Nicolas Jackson) அணிக்கான மூன்றாவது கோலை பதிவு செய்தார்.
இரண்டாவது பாதியிலும் லூடன் டவுன் (Luton Town) அணி வீரர்களால் செல்சி அணியின் வீரர்களை எதிர்த்து கோல்கள் எதுவும் பதிவு செய்ய முடியாமல் போனது.
இதன் மூலம் செல்சி அணி மூன்றாவது போட்டியில் 3-0 என வெற்றிபெற்றது.
செல்சி அணி இதற்கு முன்னர் விளையாடிய இரு போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வியும் மற்றைய போட்டி சமநிலையிலும் முடிவடைந்துள்ளது