அவுஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் மனைவியான தமிழ் பெண்ணிற்கு நடந்த வளைகாப்பு: அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமனை கடந்தாண்டு மணந்த க்ளென் மேக்ஸ்வெல்.

OruvanOruvan

glenn maxwell vini raman

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல்.

இவரும் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரும் காதலித்த நிலையில் கடந்தாண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து வினி ராமன் கர்ப்பமானார், இந்த நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி தமிழ் பாரம்பரிய முறையில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமண சடங்குகளும் தமிழ் பாரம்பரிய முறையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.