ஜனாதிபதியை நான் விமர்சித்திருந்தாலும் மீண்டும் அவரே ஜனாதிபதியாக வரவேண்டும்: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

OruvanOruvan

S. Viyalendran and Ranil wickremesinghe

இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய ஜனாதிபதியே இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே சரியானது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வியாழேந்திரன் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மகேந்திர சிங் தோனி - அணியை வெற்றி பெற செய்வதே அவரது இலக்காக கொண்டு அவருடைய அணிக்கு அனைத்து கிண்ணங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

OruvanOruvan

S. Viyalendran

இன்று இருட்டுக்குள் திட்டுவதற்கு பலர் உள்ளார்கள்.

ஆனால் அந்த இருட்டுக்குள் வெளிச்ச மேத்த யாரும் முன் வருவதில்லை.

முன்னால் ஜனாதிபதி கூப்பிட்டார் யாராவது வந்து நாட்டை பொறுப்பெடுங்கள் என்று ஆனால் யாரும் முன்வரவில்லை.

இப்ப நாடிருக்கும் நிலைக்கு இப்ப இருக்கிற ஜனாதிபதிதான் சரி இந்த நாட்டிற்கு, ஜனாதிபதியை நான் இதற்கு முன்னர் விமர்சித்திருந்தாலும் இப்போதைய காலகட்டத்திற்கு அவர் தான் சரி என்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

OruvanOruvan

S. Viyalendran