ஜனநாயக தமிழ்க் கூட்டமைப்பில் இணையவும்: சிறீதரனுக்கு சிவசக்தி ஆனந்தன் அழைப்பு

OruvanOruvan

Shritharan and Sivasakthy Ananthan

தமிழரசு கட்சியினை தமது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு ஈபிஆர் எல்எப் இன் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஒருவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார் என தெரிவித்திருந்த நிலையில் சிவசக்தி ஆனந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஆனந்தன், ஏற்கனவே ஐந்து கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ்க் கூட்டமைப்பாக செயற்பட்டு வருவதாகவும், அதில் வேண்டும் என்றால் தமிழரசு கட்சி இணைந்து கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே தமிழ் கட்சிக்குள் பதவி தொடர்பில் பிரிவுகள் காணப்படும் நிலையில், அவர்களது அரசியல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ஆனந்தன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழரசு கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழரசு கட்சி தமது கூட்டணியில் இணைந்து செயற்பட விரும்பினால் கட்சியின் யாப்பில் மாற்றங்கள் செய்வது குறித்தும் ஆலோசிக்கலாம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.