திடீரென வீட்டுக்குள் பாம்பு நுழைந்துவிட்டதா?: தயவு செய்து ஓட வேண்டாம்

OruvanOruvan

Safety tips about snake

பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் ஒரு கணம் பயத்தில் உறைந்து போய்விடுவார்கள். சிங்கம், புலி போன்ற விலங்குகள் காட்டில் மட்டும்தான் இருக்கும். ஆனால், பாம்புகள் அனைத்து இடத்திலும் இருக்கும் உயிரினம்.

இந்த பாம்பின் உடல் அமைப்பு மிகவும் சிறியது என்பதால் சிறிய துவாரத்தின் வழியாகவே எங்கேயும் உள் நுழைந்துவிடும்.

மலசலக்கூட பைப்கள், காலணிகள், சோஃபாக்களுக்கு அடியில் என எங்கேயும் பாம்புகளால் ஒளிந்துகொள்ள முடியும்.

இப்படி திடீரென எதிரில் பாம்பைக் கண்டுவிட்டால், பயத்தில் ஓட எத்தனிப்போம். ஆனால், உண்மையில் பாம்பைக் கண்டுவிட்டால் என்ன செய்யவேண்டும் என்றால்,

OruvanOruvan

Safety tips about snake

பாம்பு இருக்கும் திசையில் எந்தவொரு அசைவையும் கொடுக்காமல் இருக்க வேண்டும். பாம்பு இருக்கும் திசையில் ஓட முயற்சிக்கக் கூடாது. பாம்பை அடிக்க முயற்சிக்கக்கூடாது.

பொதுவாக பாம்புகள் மனிதர்களின் அருகில் வர விரும்புவதில்லை. மாறாக மனிதர்கள் அவைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது அவற்றின் வழியைப் பின்பற்றி வெளியேறும்.

தனக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்பதை உணரும்போது அல்லது தாக்கப்படும்போது மட்டுமே எதிர்த்து தாக்க முயற்சிக்கும்.

OruvanOruvan

Safety tips about snake

இன்னொரு விடயத்தையும் நாம் பின்பற்ற வேண்டும். பாம்பு இருக்கும் இடத்தில் அமைதியைப் பேண வேண்டும். அதனை திடுக்கிடவோ அல்லது பயமுறுத்தவோ கூடாது.

முன்பின் பாம்புகளைப் பிடித்து பழக்கமில்லாதவர்கள் அந்த செயலில் ஈடுபடக்கூடாது. பாம்புகளைக் கையாள்வதில் அனுபவம் உள்ளவர்களின் உதவியை நாட வேண்டும்.

பாம்புகளுக்கு காதுகள் இல்லை என்றாலும் அவற்றால் அதிர்வுகளை உணர முடியும். எனவே அதிகமான சத்தம் அவற்றை அமைதியான இடத்துக்கு ஓடச் செய்யும். எனினும் இவ்வாறு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.