நாற்பதில் தோன்றும் நரைமுடி பிரச்சினையா?: அருமையான தீர்வுகள் இதோ

OruvanOruvan

White Hair Problem

40 வயதுக்கு மேல் அனைவருக்குமே நரை முடி வருவது இயல்பு. தற்போதெல்லாம் இளநரை வருவதும் அதிகரித்துவிட்டது.

நரை முடியை யாரும் விரும்புவதில்லை அதனால், பல இரசாயன சாயங்களை வாங்கி நரைமுடியை கருமையாக்க பயன்படுத்துகிறோம். இது பலவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இதனால் நரைமுடியை போக்கும் சாயத்தை இயற்கையாக வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் எனப் பார்ப்போம்.

OruvanOruvan

White Hair Problem

மருதாணி

மருதாணி, தயிர், உப்பு, தண்ணீர் மற்றும் இண்டிகோ பவுடர் என்பவை இதற்கு தேவைப்படும்.

மருதாணி மற்றும் தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக பேஸ்ட்டாகியதும் இரவு முழுவதும் கூந்தலில் தடவி ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் சம அளவாக மருதாணி மற்றும் இண்டிகோ பவுடரை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

இந்த கலவையை கூந்தலில் தடவி சுமார் இரண்டு மணித்தியாலம் கழித்து அலசிக் கொள்ளவும்.

இதன் மூலம் நரைமுடி கறுப்பு நிறமாக மாறும்.

இந்த கலவையை பயன்படுத்திய அடுத்த 24 மணிநேரத்துக்கு எந்தவொரு ஷெம்பூவோ அல்லது கண்டிஷனரோ பயன்படுத்த வேண்டாம்.

OruvanOruvan

White Hair Problem

ப்ளாக் டீ

ஒரு கப் தண்ணீரில் மூன்று கரண்டி ப்ளாக் டீ இலைகளைப் போட்டு கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதனை குளிர்வித்து, தலைமுடியை கழுவ பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால், கூந்தலில் நரை முடி இருக்கும் இடத்தில் சற்று தடவி அரை மணித்தியாலம் வைத்திருந்து கழுவலாம்.

கறிவேப்பிலை

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை அரை கப் தேங்காய் எண்ணெயில் கொதிக்கவிட்டு, இந்த எண்ணெயை இரவு முழுவதும் தலையில் தடவி காலையில் குளிக்கலாம். இதனை கிழமையில் மூன்று முறை செய்தால் வேர்களிலிருந்து முடி கருமையாகும்.