இனி வெங்காயத் தோலை குப்பைத் தொட்டியில் போடாதீர்கள்: அதிலுள்ள நன்மைகள் ஏராளம்
நம் அனைவரது சமையல் அறைகளிலும் வெங்காயம் நிச்சயமாக இருக்கும். காரணம், வெங்காயம் போடாமல் சமைப்பது அரிதிலும் அரிது.
அப்படி வெங்காயத்தை பயன்படுத்தும் நாம், அதன் தோலை குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறோம்.
உண்மையில் வெங்காயத்தின் தோலில் பல நன்மைகள் உள்ளடங்கியிருக்கின்றன.
வெங்காயத் தோலில் நார்ச்சத்து அதிகம். அத்தோடு செரிமானத்துக்கு உதவுவதோடு குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்.
அதுமட்டுமில்லாமல் வெங்காயத் தோலில் விட்டமின் சி, விட்டமின் ஏ, கல்சியம், பொட்டாசியம், மினரல்ஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் - வெங்காயத் தோலில் காணப்படும் Quercetin எனப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகளாவன, ஆர்த்ரைட்டிஸ் மற்றும் இன்ஃப்ளமேட்ரி பவுல் டிசீஸ் போன்வற்றிலிருந்து பாதுகாக்கும்.
கூந்தல் ஆரோக்கியம் - வெங்காயத் தோலிலிருந்து எடுக்கப்படும் சாறு, நமது மயிர்க்கால்களை வலுப்படுத்தி முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் - வெங்காயத் தோலில் குவெர்செடின் போன்ற ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளன. இவை அதிகளவிலான ஆன்டி - ஆக்ஸிடன்ட்களைக் கொண்டிருப்பதால் உடலிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை சமப்படுத்தி இதய நோய் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
சரும ஆரோக்கியம் - வெங்காயத் தோலில் விட்டமின், மினரல் மற்றும் பிளாவனாய்ட்ஸ் போன்ற கலவைகள் காணப்படுகின்றன. எனவே இந்த வெங்காயத் தோலின் சாற்றை எடுத்து சருமம் எரிச்சலான இடங்களுக்கு பூசி வந்தால், சருமத்திலுள்ள சிவப்பு, எரிச்சல் போன்றவற்றை விரைவாக குணமாக்கும்.
செரிமான ஆரோக்கியம் - வெங்காயத் தோலில் உள்ள, டயட்ரி ஃபைபர் குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். வெங்காயத் தோலை டீயாக காய்ச்சியோ அல்லது சீசனிங் போல் தயார் செய்தோ சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சினைகள் தீரும்.