உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா?: அப்போ இதை யூஸ் பண்ணி பாருங்க

OruvanOruvan

Yellow teeth

பற்கள் ஆரோக்கியமாக இருப்பது அழகு சார்ந்த விடயம் மட்டுமல்ல ஆரோக்கியம் சார்ந்த விடயமும் கூட.

ஆனால், ஒரு சிலர் பற்களை சரியாக கவனித்துக்கொள்வதில்லை. பற்களை சரியாக கவனிக்காவிட்டால் மஞ்சள் நிற பற்களில் அடுக்குகள் உருவாகத் தொடங்கும். அத்தோடு வாய் துர்நாற்றமும் ஏற்படும்.

இந்நிலையில் பற்களிலுள்ள மஞ்சள் கறையைப் போக்குவதற்கு வீட்டிலேயே பல் பொடியை உருவாக்கலாம்.

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி இனிப்பு சோடா

1 தேக்கரண்டி பெண்டோனைட் களிமண் தூள்

1 தேக்கரண்டி கல்சியம் தூள்

1/2 தேக்கரண்டி கல் உப்பு

1/2 தேக்கரண்டி புதினா மற்றும் இலவங்கப்பட்டை தூள்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் இனிப்பு சோடா, உப்பு மற்றும் ஏனைய பொருட்களை நன்கு கலக்கவும். பின்னர் அதனை ஒரு ஜாடியில் சேமித்து வைக்கவும். அருமையான பல் பொடி தயார்.

OruvanOruvan

Yellow teeth

தோடம்பழம்

தோடம்பழத்தின் வெள்ளைப் பகுதியில் விட்டமின் சி, லிமோனீன், பெக்டின், குளுக்கோனேட் மற்றும் கரையும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும்.

எவ்வாறு பயன்படுத்தலாம்?

தோடம்பழத்தின் தோலை உரித்து, அதன் வெள்ளைப் பகுதியை பற்களில் தேய்க்கவும். துலக்குவதற்கு முன்னர், தோடம்பழ சாற்றை பற்களில் 4 நிமிடங்கள் வரையில் விடவும்.

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு

அரை தேக்கரண்டி கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து பற்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். விரல்களால் ஈறுகள் மற்றும் பற்களை தேய்க்கவும்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழ தோலின் வெள்ளைப் பகுதியை தினமும் 1 அல்லது 2 நிமிடம் பற்களில் தேய்த்து பின்னர் துலக்க வேண்டும். இதிலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பற்களுக்கு நன்மை பயக்கும்.

OruvanOruvan

Yellow teeth