பெண்களே..உதட்டுக்கு மேல் வளரும் முடி அசௌகரியத்தை ஏற்படுத்துகிறதா?: த்ரெட்டிங் செய்ய விரும்பவில்லையா?

OruvanOruvan

Upper lip hair

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி உதட்டுக்கு மேலே முடி வளர்வது இயற்கை தான்.

ஆனால், இவ்வாறு வளரும் முடியானது பெண்களுக்கு ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

அடிக்கடி இந்த முடியை நீக்க வேண்டியுள்ளது. ஆனால், த்ரெட்டிங் முறையில் நீக்குவது பலருக்கும் பிடிக்காத ஒன்று.

எனவே வேறு எந்த மாதிரியான முறைகளில் இந்த முடியை நீக்கலாம் எனப் பார்ப்போம்.

ட்ரிம்மிங்

OruvanOruvan

Trimming

இயற்கையான தோற்றத்தை விரும்பும் பெண்கள் சிறிய அளவிலான கத்தரிக்கோல் அல்லது ட்ரிம்மர் பயன்படுத்தி மேல் உதட்டு முடியை ட்ரிம் செய்து கொள்ளலாம்.

ஷேவிங்

OruvanOruvan

Shaving

எந்தவொரு வலியும் இல்லாமல் மேல் உதட்டிலுள்ள முடிகளை நீக்க வேண்டுமென்றால், ரேசர் அல்லர் எலக்ட்ரிக் ஷேவர் பயன்படுத்தலாம். இதற்கு சுத்தமான மற்றும் கூர்மையான ரேசரைத்தான் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது சில நாட்களுக்கு முடி வளர்ச்சியை ஏற்படுத்தாமல் தடுக்கும்.

க்ரீம்கள்

OruvanOruvan

Creams

ஹேர் ரிமூவல் க்ரீம்களை உதட்டின் மேல் பகுதியில் தடவ வேண்டும். இந்த க்ரீம்களில் உள்ள கெமிக்கல்கள் முடியின் புரத அமைப்பை உடைத்து அவற்றை நீக்குகிறது. இருப்பினும் இந்த க்ரீம்களை உபயோகிக்கும்போது கவனம் தேவை. சிலருக்கு எரிச்சல் அல்லது அலர்ஜியை ஏற்படுத்தும்.

வேக்சிங் ஸ்ட்ரிப்

OruvanOruvan

Waxing strips

வேக்ஸ் ட்ரிப்பை உங்கள் கைகளில் வைத்து அதனை கதகதப்பாக்கி மேல் உதட்டில் வைக்க வேண்டும். அதனை மெதுவாக முடி வளரும் எதிர் திசையில் இழுக்கும்போது அந்தப் பகுதியிலுள்ள முடி அகற்றப்படும். இந்த செயன்முறை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.

இயற்கை தீர்வுகள்

மஞ்சளை உதட்டின் மேல் பகுதியில் பூசும்பொழுது அது முடியின் வலிமையை இழக்கச் செய்து, மெல்லியதாக்கி வளர்ச்சியை தடுக்கிறது. அதேபோல் சீனி, எலுமிச்சை சாறு, தண்ணீர் என்பவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சுகர் வேக்ஸ் முடி அகற்றுவதற்கு சிறந்தது.