உடல் சூட்டை தணிக்கும் நுங்கு: எடையை குறைக்கவும் உதவுகிறது

OruvanOruvan

Ice Apple

எங்களுடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல வகையான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்கின்றோம்.

இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், எலுமிச்சை ஜூஸ், நுங்கு என பல உணவுகள் இதில் முக்கியமாக காணப்படுகின்றன.

இவற்றை விரும்பாதவர்கள் எவருமே இருக்க முடியாது.

அந்த வரிசையில் நுங்கு என்பது பலரின் பிடித்த ஒரு உணவாக கருதப்படுகிறது.

இதனை ஆங்கிலத்தில் ஐஸ் ஆப்பிள் (Ice Apple) எனக் கூறுவர்.

அதிக வெப்பம் காணப்படக்கூடிய தினங்களில் அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளுவதுண்டு.

நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தரும். வெயில் காலத்தில் வரும் அம்மை நோய்களை தடுக்க உதவும். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது.

நுங்கில் காணப்படும் சத்துக்கள்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரேற்றத்தின் மூலமாகும்.

கல்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

நுங்கு உட்கொள்வதினால் கிடைக்கும் நன்மைகள்

கோடையில் உடல் சூட்டைத் தடுக்க நுங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

நுங்கு வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்கு உதவும்.

OruvanOruvan

Ice Apple

இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைவதோடு நுங்கு குடல் புண்ணை ஆற்றும்.

இதை சாப்பிட்டால் தாகம் தீரும்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக காணப்படுபவர்களுக்கு இது ஒரு மருந்தாக அமைகிறது.

கர்ப்பிணிகள் இதை உட்கொள்வதனால் செரிமானம் துரிதமாகும்.

வெயிலில் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் தோல் நோய்களை நுங்கு தடுக்கிறது.