இரவில் தயிர் சாப்பிட்டால் ஆபத்து: எப்போது சாப்பிடலாம்?

OruvanOruvan

Curd

கொழுத்தும் வெயிலில் தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும்.

தயிருக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு.

தயிரில் உள்ளடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சீராக நடைபெற நன்கு உதவி புரியும்.

எனினும், சிலர் தயிரை இரவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூற கேள்வி பட்டு இருப்போம். இரவில் தயிரை சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்று பார்க்கலாம்.

OruvanOruvan

வயிற்று பிரச்சினை இருப்பவர்கள் இரவில் தயிர் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு செரிமான கோளாறு உண்டாகும்.

தயிரில் கொழுப்பு மற்றும் புரதம் அதிகளவில் இருக்கும்.

இதனால்தான் இரவில் தயிர் சாதம் அல்லது கட்டி தயிர் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரவில் நம் உடலுக்கு பெரிதாக உழைப்பு இல்லாததால் சாப்பிட்ட உணவு செரிமானமாவதற்கு சிரமம் ஏற்படும். இதனால்தான் இரவில் உங்கள் உணவுடன் தயிர் கலப்பதை தவிர்க்க வேண்டும்,

தயிர் உடல் சூட்டை தணிக்கும் பொருள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்று படி, தயிர் நம் உடலில் உள்ள கப தோஷம் எனும் சக்தியை அதிகரிக்கிறது.

பொழுது சாய்ந்த நேரத்தில் தயிர் சாப்பிடுவது அந்த கப தோஷ சக்தியை இன்னும் அதிகரிக்கும், அதனால் இரவில் தயிர் சாப்பிடுபவர்களுக்கு சளி, மூக்கடைப்பு, இருமல் போன்றா பிரச்சனைகள் உண்டாகும்.

இதனால் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தயிரை இரவில் அரவே தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுருத்துகின்றனர்.

OruvanOruvan

curd

எப்போது தயிரை சாப்பிடலாம்?

தயிரை இரவில் மட்டும் தவிற்கலாம்.

மற்றபடி காலை உணவு, மதியம் இவ்வளவு ஏன் மாலை கூட எடுத்துக்கொள்ளலாம்.

பகல் நேரங்களில் நம் உடலுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும் அதனால் அந்த நேரத்தில் அளவுடன் தயிரை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.