முகப்பருக்களை துரத்தும் துளசி இலை: இனி இப்படி யூஸ் பண்ணுங்க

OruvanOruvan

Holy basil for skin problems

பெண்கள், ஆண்கள் என அனைவருக்குமே தற்போது இருக்கும் சருமப் பிரச்சினைகளில் ஒன்று தான் முகப்பருக்கள்.

முகத்தின் அழகை கெடுக்கும் இந்த முகப்பருக்களை எப்படி போக்குவது என்ற கவலை அனைவருக்கும் இருக்கும்.

அதற்கு சிறந்ததொரு தீர்வுதான் துளசி. இந்த துளசியானது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் சருமப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வைக் கொடுக்கிறது.

இனி துளசியைக் கொண்டு எப்படி ஃபேஸ் பெக்குகள் தயாரிக்கலாம் எனப் பார்ப்போம்.

OruvanOruvan

Basil and curd

துளசி மற்றும் தயிர்

துளசி இலைகளை வெயிலில் காய வைத்து, அரைத்து, ஒரு கரண்டி துளசி பொடி மற்றும் ஒரு கரண்டி தயிர் சேர்த்து ஃபேஸ் பெக் தயாரிக்கவும். இது முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும்.

துளசி மற்றும் தேன்

துளசிப் பொடியை எடுத்து தேவையான அளவு தேன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரையில் வைத்திருந்து கழுவ வேண்டும். இது சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கும்.

OruvanOruvan

Basil and oats

துளசி மற்றும் ஓட்ஸ்

ஒரு பாத்திரத்தில் துளசி பொடி மற்றும் ஓட்ஸ் இரண்டையும் சம அளவாக எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனை பேஸ்ட் வடிவில் தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் கழுவவும்.

துளசி மற்றும் வேம்பு

துளசி, வேப்பம் இலைகள் இரண்டையும் சம அளவு எடுத்து கழுவி, அரைக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின்னர் கழுவவும். இது முகப்பருக்களை அகற்ற உதவும்.