பெரிய வெள்ளி: தியாகத்தின் மகத்துவம்

OruvanOruvan

Good Friday

'உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்'

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர். இறைவனின் ஒரே பேறான இயேசுக் கிறிஸ்துவின் உயிர் பலியின் தியாகம், மக்களினால் உணர்வுப்பூர்வாகமாக நினைவுகூரப்படுகின்றது.

உலக மாந்தர்களின் பாவங்களை போக்குவதற்காக அவர்களுக்கு மீட்பளிப்பதற்காக இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு உயிர் நீத்த நாளையே பெரிய வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

இந்த புனித நாளானது, இயேசுகிறிஸ்துவின் பாடுகள், சிலுவைச் சாவு போன்றவற்றை நினைவு கூர்வதாக அமைந்துள்ளது.

தியாகத்தின் நன்நாளில் உலக வாழ் கிறிஸ்தவர்கள் மாமிசத்தை தவிர்த்து ஒருத்தல்களில் ஈடுபட்டு, தமது பாவத்திற்காய் மனமுருகி இறைவனிடம் மன்றாடுவார்கள். சிலுவைப் பாதை வழிபாடுகள், திருவிழிப்பு வழிபாடுகள் என இறை சிந்தனையில் மக்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

இறைமகன் இயேசுக் கிறிஸ்து சிலுவையில் மாலை மூன்று மணிக்கு மரணமடைந்தததை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்மான நினைத்து ஆராதிப்பார்கள். மறுநாள் அல்லேலுயா சனியாக தமது திருமுழுக்கினைப் புதிப்பித்துக் கொள்ளும் கிறிஸ்தவர்கள், ஞாயிறு தினத்தை இயேசுவின் உயிர்ப்பை நினைத்து அகமகிழ்வர்.