மாட்டின் சாணத்தை சன் ஸ்கிரீன் கிரீமாக பயன்படுத்தும் மக்கள்: எந்த நாட்டில் தெரியுமா?

OruvanOruvan

Cow Urine Sunscreen Eric Lafforgue

மாட்டின் சிறுநீரில் குளித்து அதனுடைய சாணத்தை சன் ஸ்கிரீன் கிரீமாக இன்றளவும் சில நாடுகளில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது நம்ப முடியத ஆச்சரியம்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் பசுக்கள் வெளியேற்றும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீன் கிரீமாக பயன்படுத்துகின்றனர்.

தெற்கு சூடான் நாட்டில் அன்கோல் வதுசி என்ற இனத்தைச் சேர்ந்த மாடுகள் 8 அடி உயரம் வரை வளரக்கூடியவை.

இந்த வகை மாடுகள் முண்டாரி எனப்படும் பழங்குடியின மக்களிடம் அதிகம் உள்ளது.

இதனை அவர்கள் தங்களுடைய கௌரவ சின்னங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பசுக்களை பாதுகாப்பதற்காக பழங்குடியின மக்கள் ஆயுதங்களை வைத்துள்ளனர்.

OruvanOruvan

Cow Urine Sunscreen

குறிப்பாக பசுக்களை பாதுகாப்பதில் இயந்திர துப்பாக்கிகளை கொண்ட காவலர்கள் பணிக்கு நிறுத்தப்படுகிறார்கள் என்றால் உங்களினால் நம்ப முடிகின்றதா? அங்கு மாடுகளின் சிறுநீர் குளிப்பதற்கு மட்டுமின்றி வீடுகளில் தெளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பசுக்களின் சிறுநீரில் உள்ள அம்மோனியா பழங்குடியின மக்களின் தலை முடியை ஆரஞ்சு நிறமாக மாற்றியுள்ளது.

முண்டாரி பழங்குடி மக்கள் பயன்படுத்தும் அன்கோல் வதுசி என்ற மாடுகள் இறைச்சிக்காக மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன.

இதற்கு அதன் விலை அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும். பழங்குடியின மக்களிடையே நடக்கும் திருமணங்களின் போது வரதட்சணை பொருளாக இந்த அன்கோல் வதுசி இன மாடுகள் வழங்கப்படுகின்றன என்பதும் அடுத்த ருசிகர தகவல்.