தலையில் இரட்டை சுழி இருக்கும் ஆண்களுக்கு...: இரண்டு திருமணம் நடக்குமாம்

OruvanOruvan

Double swirl for men on the head

சில ஆண்களுக்கு தலையில் இரட்டை சுழி இருக்கும். அவ்வாறு இரட்டை சுழி இருக்கும் ஆண்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என கிராமப்புறங்களில் ஒரு கதை உள்ளது. ஆனால், அது உண்மையா அல்லது வெறும் கட்டுக்கதையா எனப் பார்ப்போம்.

உண்மையில் 5% பேருக்குத்தான் தலையில் இரட்டை சுழி இருக்கும் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இரட்டை சுழி என்பது மரபணுவுடன் தொடர்புடையது. தாத்தா, தந்தை என தலையில் இரட்டை சுழி இருப்பவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும் இரட்டை சுழி இருக்கும்.

கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால், இரட்டை சுழி இருக்கும் ஆண்களுக்கு முதல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பின்னர் ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த திருமணம் நிறுத்தப்பட்டு மீண்டும் இரண்டாவது திருமணம் நிச்சயமாகும் என்றொரு நம்பிக்கை உள்ளது.

ஜோதிடத்தின்படி ஒருவருக்கு இரட்டை சுழி இருந்தால் அவர், எதையும் நேரடியாக பேசக்கூடியவர், பொறுமையானவர், மற்றவர்களுடன் அன்பாக பழகக்கூடியவர், எதற்கும் முன் நிற்பவர் இப்படி பல குணங்களுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

OruvanOruvan

Double swirl for men on the head