உடல் எடை மின்னல் வேகத்தில் குறையனுமா?: தினமும் ஒரு செவ்வாழையை இப்படி சாப்பிடுங்க
எடை குறைக்க தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.
செவ்வாழையில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து போன்றவை அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளன.
எனவே எடையை குறைக்க நினைப்போருக்கு செவ்வாழை மிகச்சிறந்த பழமாக விளங்குகிறது.
அதுவும் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன.
இப்போது தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைக் காண்போம்.
எடையை குறைக்கும்
அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க செவ்வாழை பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் மற்றும் அத்தியாவசிய சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
அத்துடன் செவ்வாழையில் கொழுப்புக்கள் குறைவு மற்றும் கலோரிகள் குறைவாகவே உள்ளதால், இவற்றை உட்கொள்ளும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதோடு, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கிறது.
கூடுதலாக, செவ்வாழையில் உள்ள நார்ச்சத்து உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இந்த செவ்வாழையை தினமும் காலையில் உட்கொண்டு வருவதன் மூலம், எடையை சிரமமின்றி குறைக்கலாம்.
ஏனையை நன்மைகள்
செவ்வாழையில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த நாளங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தி யமேம்படுத்தும்.
செவ்வாழையில் கரோட்டினாய்டுகள் இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
லுடின் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற கரோட்டினாய்டுகள் நிறைந்த செவ்வாழையை உட்கொண்டால் வயதான காலத்தில் ஏற்படும் மாகுலர் சிதைவைத் தடுக்கும்.
இந்த செவ்வாழையை உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் உட்கொண்டால், ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.
செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6 ட்ரிப்டோபேனை செரடோனினாக மாற்ற உதவுகிறது.
செவ்வாழையை கோடையில் சாப்பிடலாமா?
தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் செவ்வாழையை தினசரி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
இதனால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, கோடையில் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.