தொப்புள் என்பது காயம்: அதனை சுத்தப்படுத்துவது அவசியம்

OruvanOruvan

Navel

நமது உடலை தினமும் சுத்தம் செய்யவேண்டியது கட்டாயமாகும். அப்படி சுத்தம் செய்யாவிட்டால் உடலில் அழுக்குகள் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கும்.

சில நேரத்தில் உடலில் சில பகுதிகளை சவர்க்காரமிட்டு தேய்த்து கழுவ மறந்துவிடுகிறோம்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த பகுதியில் மாத்திரம் பக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டு, துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

உண்மையில் தொப்புள் என்றால் ஒரு காயம் என அறிவியல் கூறுகிறது. தாயிடமிருந்து குழந்தை பிரிக்கப்படும்போது ஏற்படும் காயம்தான் அது.

சிலருக்கு தொப்புள் குளியாகவும் இன்னும் சிலருக்கு தொப்புள் வெளியில் தள்ளியும் இருக்கும். இந்த காயம் எப்படி ஆறுகிறதோ அதன் அடிப்படையில்தான் இந்த தொப்புள் இருக்கும்.

2012ஆம் வருடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2368 வகையான பக்டீரியாக்கள் தொப்புளில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் மிகவும் அழுக்கான பகுதியாக தொப்புள் காணப்படுகிறது.

இந்த இடத்தில் அதிகமான வியர்வை சுரப்பதோடு, அந்த இடம் குழியாக இருப்பதால் யாரும் விரலை விட்டு தொப்புளை சுத்தம் செய்வதில்லை.

சில சமயங்களில் இந்த தொப்புளில் அரிப்பு ஏற்பட்டாலோ அல்லது சிவந்து காணப்பட்டாலோ அதற்கு பக்டீரியாக்கள்தான் காரணம். இது பாரியளவில் பிரச்சினையை ஏற்படுத்தும் எனவே, தொப்புளை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம்.