முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரணுமா?: அப்போ கொய்யா இலை ஹேர் பெக் போடுங்க
இன்றைய வாழ்க்கை முறையில் அதிகமான மன அழுத்தம், உணவு முறையில் மாற்றம், முடியை ஸ்ட்ரெய்னிங் செய்தல், நிறச்சாயம் பூசுதல் போன்ற காரணங்களினால் அதிகமானோருக்கு முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.
எதற்காக முடி உதிர்கிறது என்பதே தெரியாமல் என்னவெல்லாமோ செய்வோம்.
உண்மையில் முடி வளர்ச்சிக்கு தேவையான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முக்கியமானவை கீரைகள், பழங்கள் போன்றவை.
அதேபோல் சில ஹேர் பேக்குகளின் மூலமாகவும் நாம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
அந்த வகையில் கொய்யா இலையைக் கொண்டு எவ்வாறு ஹேர் பேக் தயாரிக்கலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொய்யா இலை - ஒரு கைப்பிடி
முட்டை - 1
கடுகு எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
கொய்யா இலையை நன்றாக சுத்தம் செய்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் முட்டையை மஞ்சள் கருவுடன் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் அதில் இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் பக்குவத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.கொய்யா இலை ஹேர் பெக் தயார்.
இப்போது உச்சந்தலை முதல் முடியின் அடி வரை தேய்த்து முப்பது நிமிடங்களின் பின்னர் ஷெம்பூ போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்.
இந்த ஹேர் பெக்கை 3 மாதங்கள் வரையில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.