மிஞ்சிய பழைய சோறு: ஏராளமாக அள்ளித்தரும் பலன்கள்

OruvanOruvan

Old rice

மிஞ்சிய பழைய சோறு பல அற்புத சுவைகளை கொண்டுள்ளது.

முதல் நாள் மிஞ்சிய சோற்றில் நீரூற்றி மறுநாள் சாப்பிடும் இந்த உணவில் பி6, பி12 என்பன ஏராளமாக காணப்படுகின்றன.

இதனுடன் பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேரும் போது நோயெதிர்ப்புச் சக்தி மேலும் அதிகரிக்கிறது.

பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த உணவு உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியோடு, உற்சாகத்தையும் சேர்த்துத் தரும் அற்புத உணவாக கருதப்படுகிறது.

காலை உணவாக இதனை எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் , சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.

குடற்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும் வல்லமை இதற்கு உள்ளது.

மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

இதனால் அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, அதிக பலன் கிடைக்கும்.

பழைய சோறு பெருங்குடல் செல்களை வீக்கம் மற்றும் புற்றுநோயிலிருந்து காக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.