இந்த சமையலறைப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும்: எதுவென்று தெரியுமா

OruvanOruvan

Kitchen items

ஒரு வீட்டில் சமையலறை என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் நமக்கே தெரியாமல் சில சமையலறைப் பொருட்கள் நமக்கு உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அந்த வகையில் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சமையலறைப் பொருட்கள் எவையெனப் பார்ப்போம்.

பிளாஸ்டிக் பொருட்கள்

OruvanOruvan

Plastic items

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் பிஸ்பினால் (BPA) என்ற கெமிக்கலானது, ஹோர்மோன் சீர்குலைவை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

OruvanOruvan

beef

இறைச்சியை பதப்படுத்த பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் நமது உடலில் நைட்ரோசமைன்களாக மாற்றமடைகின்றன. இதனால் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கிறது.

அலுமினியம் ஃபாயில்

OruvanOruvan

Aluminium poyil

சில உணவுகள் அலுமினிம் ஃபாயிலில் சமைக்கப்படுகிறது அல்லது சேமிக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது அது உணவுடன் கலக்கும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக புற்றுநோய் ஏற்படும்.

நான்ஸ்டிக் குக்கர்

OruvanOruvan

Nonstick pan

நான்ஸ்டிக் குக்கர் உருவாக்க பயன்படுத்தப்படும் பெர்ஃபுளோரோஆக்டநோயிக் என்னும் அமிலம் புற்றுநோயுடன் தொடர்புபட்டது. எனவே, இதில் சமைக்கும்போது வெளியாகும் புகை புற்றுநோய்க்கு வழி வகுக்கும்.