கனவில் பாம்பு குவியலாக ஓட ஓட துரத்துகின்றதா? ஆபத்து: அலட்சியம் வேண்டாம்

OruvanOruvan

Snake Dreams

நமக்கு தினமும் பலவிதமான கனவுகள் வருகின்றன. இப்படி வரும் அனைத்து கனவுகளும் பலித்து விடுவதும் இல்லை, பலன் தருவதும் இல்லை.

எந்த ஒரு கனவு நிஜத்தில் நடப்பது போன்ற உணர்வை தந்து, தூக்கத்தில் இருந்து எழுந்த பிறகும் அந்த தாக்கமும், நினைவுகளும் நம்முடைய மனதில் நிற்கிறதோ அது போன்ற கனவுகள் மட்டுமே பலன் தரும் என சாஸ்திரம் சொல்கிறது.

இந்த கனவும் நாம் காணும் நேரத்தை பொறுத்து அதன் பலன் மாறுபடும்.

பாம்பு கனவில் வருவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றது என்று அறிந்து கொள்ளலாம்.

பலருக்கு பாம்புகள் அடிக்கடி கனவில் வரும். ஆனால் பாம்புகள் எல்லோருடைய கனவிலும் வராதாம். யாருக்கும் ஒரு குறிப்பிட்ட தகவலை கொண்டு போய் சேர்க்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தான் பாம்புகள் கனவில் வருமாம்.

இந்துக்களின் நம்பிக்கையின் படி பாம்பினை தெய்வமாக வழிபடும் வழக்கம் உள்ளது. அதனால் பாம்புகள் கனவில் வந்தால் ஆபத்து அல்லது கெட்ட அறிகுறியாகும்.

OruvanOruvan

Snake Dreams

கனவில் பாம்பு துரத்தினால்

கனவில் பாம்பு உங்களை விரட்டினால் வறுமை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். அதுவே, ஒரு பாம்பு உங்கள் காலைச்சுற்றி பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பகவான் பிடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

கனவில் பாம்பு கடித்தால்

கனவில் பாம்பு நம்மை கடித்தால், அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.

ஏனென்றால், இவ்வளவு நாள் நம்மை பிடித்திருந்த பீடை விலகப்போகிறது என அர்த்தம்.

வீட்டுக்குள் இருந்து பாம்பு வெளியே சென்றால்

ஒரு பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டு, எதுவும் செய்யாமல் அமைதியாக வெளியே செல்வதை போல நீங்கள் கனவு கண்டால், நீங்கள் வேண்டிய நேத்திக்கடனை விரைவில் செலுத்த வேண்டும் என்பது பொருள். இதுவே, அந்த பாம்பு உங்களின் தலைக்கு மேல் குடை பிடிப்பது போல நின்றால், தெய்வத்தின் அனுசரணை மற்றும் பார்வை உங்கள் குடும்பத்தின் மீது உள்ளது என கருதப்படுகிறது. பாம்பு யார் மீதாவது ஏறிச்செல்வது போல கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று அர்த்தம்.

பாம்பை கொன்றால்

கனவில் நீங்கள் ஒரு பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்து கிடப்பதை கண்டாலோ உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து விலகிவிட்டது என அர்த்தம். இருப்பினும் அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பாம்பை கையில் பிடித்தல்

பாம்பை கையில் பிடிப்பதை போன்ற கனவு உங்களுக்கு வந்தால், சுபமாக கருதப்படும். இதன் அர்த்தம், உங்களுக்கு தனலாபம் உண்டாகப்போகிறது என அர்த்தம். செல்வ செழிப்பு பெரும்.

குவியலான பாம்பை கண்டால்

நீங்கள் ஒரே நேரத்தில் நிறைய பாம்புகளைப் காண்டால், பெரிய சிக்கலில் சிக்கப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். இந்த நேரம் கவனமாக இருக்க வேண்டும். கடவுள் பிரார்த்தனை மன அமைதியை கொடுக்கும்.

வெள்ளை நிற பாம்பை கண்டால்

மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. உங்கள் கெட்ட காலம் விரைவில் முடிந்து நல்ல காலம் பிறக்கப்போகும் என்று நம்பப்படுகிறது.

கனவு பலிக்கும் நேரம்

இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருஷத்திலும், 2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும், 3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும், சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும் பலிக்கும் என கூறப்படுகிறது.