ஆரோக்கியமான பெருஞ்சீரகம்: அள்ளித் தரும் பயன்கள்

OruvanOruvan

Fennel seeds

சோம்பு எனப்படும் பெருஞ்சீரகம் சமையலறையில் காணப்படக்கூடிய முக்கிய பொருளாகும்.

இது அநேகப் பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

சமையலுக்கு சுவையும் , மணமும் அதிகமாக அள்ளிக் கொடுக்கும் பெருஞ்சீரகம் சமையலறையில் தனித்து விளங்கக்கூடியது.

இதன் மூலம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வாய் சுகாதாரத்தை பராமரிக்கும்

உங்களால் வெளிவிடப்படும் மூச்சுக்காற்று துர்நாற்றம் கொண்டதாக இருந்தால் நம் உணவுக் குழாயில் பக்டீரியாக்கள் உள்ளதாக அர்த்தப்படும். அந்த பக்டீரியாக்களை எதிர்த்துப் போரிடும் பண்பு பெருஞ்சீரகத்திற்கு உள்ளது.

இது நாம் உணவு உண்ட பின் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவு உண்ட பின்னர் பெருஞ்சீரகம் வழங்கப்படுகிறது.

OruvanOruvan

உடல் எடையை குறைக்க உதவும்

பெருஞ்சீரக தண்ணீர் உங்களுக்கு ஏற்படும் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.

எடையை குறைக்க இது சிறந்த தீர்வாக அமைகிறது.

OruvanOruvan

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்

விட்டமின் சி நிறைந்துள்ள பெருஞ்சீரக நீர் , உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை பலப்படுத்துகிறது. தொற்றுகளையும், நோய்களையும் எதிர்த்து போராடுகிறது.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவற்றை குணப்படுத்துகிறது.

கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

விட்டமின் ஏ நிறைந்தது.

இது கண்கள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வயது தொடர்பான கண் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

OruvanOruvan

மாதவிடாய் அறிகுறிகளை போக்குகிறது

சோம்பு தண்ணீர் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

மாதவிடாயின்போது ஏற்படும் வலியை போக்கி, உடலை ஆற்றுப்படுத்துகிறது.

சிறிது சோம்பு தண்ணீரை பருகினால், மாதவிடாய் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

இரத்த அழுத்தத்தை சீராக்கும்

பொட்டாசியம் சத்து நிறைந்த பெருஞ்சீரகம் நமது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பவர்கள் தினசரி பெருஞ்சீரக டீ அருந்தி வரலாம்.

தாய்ப்பால் சுரக்கும்

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தவறாமல் எடுத்துக் கொள்ளலாம்.

இது பால் சுரப்பை தூண்டக் கூடியது ஆகும்.

உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது

பெருஞ்சீரகத்தில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய எண்ணெய் சத்து காணப்படுகிறது.

நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலை தூய்மையானதாக வைத்துக் கொள்ள உதவுகிறது.