நுளம்பு விரட்டியாக பயன்படும் எலுமிச்சை தோல்: இந்த ட்ரிக் தெரியாமப் போச்சே

OruvanOruvan

Uses of lemon skin

எலுமிச்சைப் பழமானது உணவு, உடல் நலம் என பல விடயங்களுக்கு உதவுகிறது. அந்த வகையில், எலுமிச்சைப் பழத்திலுள்ள அமிலத்தன்மை பக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் செயல்படுகின்றன. இது க்ரீஸ் மற்றும் எண்ணெய் பிசுபிசு கறைகளை அகற்ற உதவுகிறது.

இப்போது எலுமிச்சைத் தோலை நுளம்பு விரட்டியாகவும் பயன்படுத்தலாம்.

பிழிந்த எலுமிச்சை தோலை குடுவைப் போல மாற்றி அதில் கிராம்பு, எண்ணெய், கற்பூரம் என்பவற்றை சேர்த்து திரி வைத்து விளக்கேற்றி வைக்கும் பொழுது நுளம்பு விரட்டியாக செயல்படும்.

இதிலிருந்து வரக்கூடிய வாசனையானது, பூச்சிகளை விரட்ட உதவும்.

OruvanOruvan

Uses of lemon skin

எலுமிச்சை தோலை பேக்கிங் சோடா மற்றும் உப்புடன் கலக்கும்பொழுது அது ஒரு இயற்கையான சுத்தப்படுத்தும் பேஸ்ட்டாக மாறுகிறது. இது சமையலறை மேற்பரப்புக்கள், காய்கறி நறுக்கும் போர்டுகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு உதவும்.

எனவே இனிமேல் எலுமிச்சை பழத்தை உபயோகித்துவிட்டு அதன் தோலை இதுபோன்ற விடயங்களுக்கு பயன்படுத்தலாம்.