பணியிடத்தில் மன உளைச்சலா?: இவற்றை முயற்சி செய்து பாருங்கள்

OruvanOruvan

Depression

நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் ஏற்படும் சிக்கல்கள் உங்கள் மனநிலையை நிச்சயமாக சீரழிக்கும்.

புத்துணர்ச்சியாக ஆரம்பிக்கும் நாள் சில சமயங்களில் துரதிஷ்டமான நாளாக மாறும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

சவால்மிக்க சந்தர்ப்பத்தில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சக பணியாளர்களுடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக பணிபுரிய சில தகைமைகளை சில குணங்களை நாம் வளர்த்துக் கொள்வது முக்கியமாகும்.

பொறுப்புக்களை ஏற்று நடத்தல்

நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் வழங்கப்படும் பொறுப்புக்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

வழங்கப்பட்ட பொறுப்புக்களின் போது குழுவுடன் இணைந்து செயற்படுங்கள். இது உங்களுடைய பணியில் நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றீர்கள் என்பதனைக் காட்டும்.

தலைமைத்துவம்

தலைமைத்துவப் பண்பு என்பது எங்களுடைய பணியில் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.

உங்கள் முழுக் குழுவையும் சமாளிக்ககூடிய திறமை உங்களிடம் காணப்பட வேண்டும்.

இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

யோசனை வழங்குதல்

புதிய யோசனைகளை கூறுவதும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதும் சிறந்த பழக்கங்களாக விளங்குகின்றன.

இது ஒரு பாராட்டுக்குரிய விடயமாக கருதப்படுகிறது.

பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இதன் மூலம் வழங்க முடியும்.

செயல் ஊக்கத்துடன் செயற்படல்

நல்ல செயல் ஊக்கமுள்ளவர்களாக இருப்பது சிறந்தது.

இதன் போது காலக்கெடுவுக்குள் உங்கள் பணிகளை முடிக்க வேண்டும்.

வேலைகளை திட்டமிட்டு வேலைகளை பட்டியலிட்டு தாமதமின்றி செய்வது மேலும் பாராட்டை பெற்றுத் தரும்.

திறமையை நிரூபித்தல்

உங்கள் வெற்றிகள், சாதனைகள் மூலம் உங்களின் திறமையை நிரூபித்துக்கொண்டிருங்கள்.

உங்கள் குழுவில் உள்ளவர்களின் சாதனைகளின் பட்டியல்களையும், தேவையான மாற்றங்களையும் வெளிச்சமிட்டு காட்டுவதன் மூலம் உங்கள் அங்கீகாரம் மேலும் அதிகரிக்கும்.

சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை

இறுதியான விடயமாக இருந்தாலும் நீங்கள் முதலில் கடைபிடிக்க வேண்டிய ஒரு விடயம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் , சூழ்நிலையிலும் உங்களுக்கான சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் மேலும் மிளிரலாம்.

எத்தகைய கடுமையான பணிச்சுமையாக இருந்தாலும் சோர்வடையாது தன்னம்பிக்கையுடன் செயற்படுவதன் மூலம் உங்களின் திறமை மெருகேறும்.

இவ்வாறான பண்புகளை உங்களுக்குள் நீங்கள் வளர்த்துக் கொள்வதன் மூலம் பணியிடங்களில் சிறந்து விளங்கலாம்.