ஆரோக்கியத்தை வழங்கும் கடுகு எண்ணெய்: முடி உதிர்வையும் தடுக்கும்

OruvanOruvan

Mustard seed oil

சரும ஆரோக்கியத்தை அள்ளித் தரும் முக்கிய பொருளாக கடுகு எண்ணெய் விளங்குகிறது.

கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது என்பதால் மற்ற எண்ணெய்யை விட கடுகு எண்ணெய் மிகவும் சிறந்தது.

இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல், இது போன்ற பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும்

அதுமட்டுமன்றி இது ஒரு வலி நிவாரணியாகவும் செயற்படுகிறது.

அதிகமான ஆரோக்கிய நன்மைகள் கடுகு எண்ணெய்க்குள் ஒளிந்துள்ளன.

கடுகு எண்ணெய்யை டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம்.

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் கடுகு எண்ணெய்யும் பிரதானமான ஒன்றாக இருந்து வருகிறது.

கடுகு விதையிலிருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கடுகு எண்ணெய்யில் போலேட்ஸ், நியாசின், தயமின், பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் பி.காம்ப்ளக்ஸ் என நிறைய விட்டமின்கள் அடங்கியுள்ளன.

உணவின் சுவையை மெருகேற்றுவதோடு இல்லாமல் பல்வேறு விதமான உடல் நல ஆரோக்கியத்தையும் இது கொண்டுள்ளது.

சரும ஆரோக்கியம்

கடுகு எண்ணெய்யில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதுதவிர விட்டமின் ஈ இருப்பதால் சருமத்தை பாதுகாத்து, பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

சருமத்தில் உள்ள துளைகளை திறந்து வியர்வை சுரப்பிகளை தூண்டுகிறது. கடுகு எண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதால் , முகத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது.

தலைமுடி

தொடர்ந்து கடுகு எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பொடுகுகள் ஏற்படுவதை தடுத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

முடி உதிர்வதை தடுக்கிறது.

கடுகு எண்ணெய் - தயிர் ஆகிவற்றை இணைத்து முடி சார்ந்த பிரச்சினைக்கு பயன்படுத்தலாம்.

இளநரை போன்றவற்றுக்கு நல்ல பலன்களை தருகிறது.

சளி நிவாரணி

கடுகு எண்ணெய் சளி மற்றும் இருமல் தொல்லைக்கு தீர்வு அளிக்கிறது.

சுவாச உறுப்புகளில் ஏற்படும் தொற்றுகளையும் விரட்ட உதவும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. இதன் காரணமாக இதயம் தொடர்பான நோய் ஆபத்து குறைகிறது.

வலிகளை போக்கும்

எலும்பு, தசை வலிகளை போக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் வீக்கம் மற்றும் வலிகளை குறைக்கிறது.