உள்ளங்கையில் தோல் உரிகிறதா?: இதற்கு என்ன காரணம் தெரியுமா?

OruvanOruvan

Hand skin peeling problem

நன்றாக இருக்கும் நமது உள்ளங்கைகளின் தோல் திடீரென உரிய ஆரம்பிக்கும். அதை நாம் பெரிதாக எடுக்காவிட்டாலும் எதற்காக இவ்வாறு தோல் உரிகிறது? அதனை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அந்த வகையில், வறண்ட சருமம், சொரியாசிஸ், இரசாயனம் நிறைந்த சவர்க்காரம் மற்றும் க்ரீம்கள், பருவ மாற்றங்கள், அலர்ஜி, பக்டீரியா தொற்று, நோய் தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களினால் கைகளில் தோல் உரிகின்றது.

இதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம்?

வறண்ட சருமத்தினால் அடிக்கடி தோல் உரிந்தால், இளம் சூடான நீரில் கைகளை 10 நிமிடங்கள் மூழ்க வைக்கலாம் இதனால் கைகள் மென்மையாகும்.

விட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை எடுத்து கைகளில் தடவலாம். இதனால் கைகள் பளபளப்பாகும்.

கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி கைகளில் மசாஜ் செய்து காயவைத்து, இளம் சூடான நீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவேண்டும்.

அதுமட்டுமின்றி தேங்காய் எண்ணெயை கைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தாலும் கைகள் பளபளப்பாகும்.